வேலூர், நவ.28: வேலூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு விரிவாக்கம் ெசய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை, மதுரை, திருச்சி, வலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வந்தது. கடந்த 2022ல் சிறுவர்கள் மாயமானது குறித்து, 1,826 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1,626 வழக்குகளில் சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மற்ற வழக்குகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வந்தது. இதில் 4 போலீசார் மட்டுமே பணியில் இருந்த நிலையில், தற்போது ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ உட்பட 16 போலீசார் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்திலும் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் நடக்கும் குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் மாயமானது குறித்த வழக்குகளை சிறப்பு விசாரணை நடத்துவார்கள். இவற்றை எஸ்பி நேரடியாக கண்காணிப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘குழந்ைதகள்கடத்தல் தடுப்பு பிரிவு மாவட்டங்கள் தோறும் விரிவாக்கம் ெசய்யப்பட்டுள்ளது. முன்பு 4 பேர் மட்டுமே இருந்தனர். இப்ேபாது ஒரு மாவட்டத்திற்கு 16 பேர் வரையில் நியமிக்கப்பட்டுள்ளனர், என்றனர்.
The post குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு விரிவாக்கம் காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் வேலூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் appeared first on Dinakaran.