இந்நிலையில் நேற்று மதியம் கரீம் நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதைதொடர்ந்து தெலங்கானா மாநிலம் மெகபூபாத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் – பிஆர்எஸ் தெலங்கானா மாநிலத்தை சீரழித்துவிட்டது. தெலங்கானாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமையும் என்று நம்பிக்கை உள்ளது. பாஜகவுடன் இணைந்து பணியாற்ற கே.சி.ஆர் என்னிடம் வந்தார். ஆனால் தெலங்கானா மக்களின் விருப்பப்படி நான் கே.சி.ஆரை சந்திக்கவில்லை. எனவே கே.சி.ஆர். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மோடியை அவமானப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.
தெலங்கானா என்றால் மரபுகள் மற்றும் தொழில்நுட்பம். ஆனால், மூடநம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் முதல்வர் செயல்படுகிறார். பண்ணை வீட்டு முதல்வர் கே.சி.ஆர். தேவையா? காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரு கட்சிகளும் ஊழலை ஊக்குவிக்கும் கட்சிகளாகும். நலிந்த பிரிவினர் மற்றும் பஞ்சாரா பழங்குடியினரின் மேம்பட வேண்டும் என பாஜக விரும்புகிறது.
தெலங்கானாவில் இரட்டை இன்ஜின் ஆட்சி அமைந்தால் வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து ஐதராபாத்தில் ஆர்டிசி எக்ஸ் ரோட்டில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் காட்சிகூடம் வரை பிரதமர் மோடியின் ரோட் ஷோ நடந்தது.
The post பாஜவுடன் இணைந்து பணியாற்ற சந்திரசேகர ராவ் என்னிடம் வந்தார்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.
