பாண்டியர் கால பிடாரி சிற்பம் கண்டெடுப்பு

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் கல்லுப்பட்டி கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் தர்மராஜா, கருப்பசாமி, முரளிதரன் ஆகியோர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் தாமரைக்கண்ணன் மற்றும் ஸ்ரீதர், கல்லுப்பட்டி கிராமத்திற்கு சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிற்பங்களானது ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது தெரியவந்தது. ஒரு சிற்பமானது நான்கடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. பாண்டியர்கள் முதல் தாய்வழி தெய்வமாக பிடாரி சிற்பத்தை வணங்கினர். அதன் பிறகு தவ்வை, கொற்றவை, சப்தமாதர்கள் சிலைகளை வழிபாடு செய்தனர்.

The post பாண்டியர் கால பிடாரி சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: