வேப்பூரில் சுகாதார துறையினர் கடைகளில் ஆய்வு

 

குன்னம், நவ.25: குன்னம் அருகே வேப்பூரில் சுகாதாரதுறையினர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்காண்டனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பெருட்கள் மற்றும் குட்கா, பாக்குகள் விற்கப்படுகிறதா என சுகாதாரதுறை மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் பெரம்பலூர் மாவட்ட துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், தலைமையில் மாவட்ட நலக்கல்வியாளர், ராஜி, மாவட்ட புகையிலை தடுப்பு மைய சமூகபணியாளர், தென்றல் குமாரி, சுகாதார ஆய்வாளர் ரவின்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா சிகரெட் பாக்கெட்டுகள் இருந்ததை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தற்காக கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். இனிவரும் காலங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

The post வேப்பூரில் சுகாதார துறையினர் கடைகளில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: