நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து மிகவும் அநாகரிகமான முறையில் பேசியவீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புகார் அளித்தது. அதன் படி, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், நடிகை திரிஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ), 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் கடந்த 21ம் ேததி வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே த்ரிஷா குறித்து பேசவில்லை என மன்சூர் அலிகான் தரப்பு தெரிவித்தது. மேலும் நடிகை திரிஷா தரப்பில் எந்த புகாரும் அளிக்கவில்லை, என்று கூறப்பட்டது. மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: