கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு கோடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 11 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்ட நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த வாகன ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் சம்மன் அனுப்பியுள்ளனர். அதாவது, 2017ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாகன ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார். கனகராஜ் விபத்தில் சிக்கிய போது ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சிவக்குமார் அவசர உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் வாகன விபத்தினை அவர் எப்போது பார்த்தார்?, விபத்தில் சிக்கியவரை முன்னரே அடையாளம் தெரிந்ததா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்ப சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்..!! appeared first on Dinakaran.