திருப்பதி அலிபிரி சப்தகோ பிரதட்சனை மந்திரத்தில் சீனிவாசா திவ்ய அனுக்ரக யாகம் தொடங்கியது

*அமைச்சர், துணைவேந்தர் பங்கேற்பு

திருமலை : திருப்பதி அலிபரி சப்தகோ பிரதட்சனை மந்திரத்தில் சீனிவாசா திவ்ய அனுக்ரக யாகம் நேற்று தொடங்கியது. இதில் அமைச்சர் ரோஜா, எஸ்.வி.வேத பல்கலைக்கழக துணைவேந்தர் ஆச்சார்யா ராணி ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.திருப்பதி அலிபிரியில் உள்ள சப்தகோ பிரதட்சனை மந்திரத்தில், சீனிவாச திவ்ய அனுக்ரக யாகம் நேற்று தொடங்கியது. முன்னதாக எஸ்.வி. வேத பல்கலைகழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பஜனை மண்டலி கலைஞர்கள் தேவி பூதேவி சமேய சீனிவாச பெருமாள், கருடாழ்வார் உள்ளி சுவாமி வேடமணிந்தும், கோலாட்டம் ஆடியபடியும் ஊர்வலமாக சப்தகோ பிரதட்சனை மந்திரத்திற்கு சென்றனர்.

இதில் அறங்காவல் குழுத்தலைவர் கருணாகர், திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா உட்பட்ட நிர்வாகிகள் பலர் ஊர்வலமாக சென்றனர். பின்னர் இந்த யாகத்தை தொடங்கி வைத்து அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகர் பேசியதாவது:திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்து வைப்பதுடன், பக்தர்களிடமே கடவுள் எனும் விதமாக நிவாச கல்யாணம், வைபவ உற்சவம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள், பஜனை இசைக்குழுக்கள், அன்னமாச்சார்யா சங்கீர்த்தனங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்து கலச்சாரத்தில் யாகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு ஏழுமலையானின் ஆசியுடன் அலிபிரியில் யாகம் தொடங்கி நிரந்தரமாக நடைபெறும். பக்தர்கள் இந்த யாகத்தை செய்ய வேண்டும் என்றால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஆனால் தேவஸ்தானம் சார்பில் அனைவரும் சீனிவாச பெருமாளின் ஆசி பெற வேண்டும் என இந்த யாகம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் குறைந்த செலவில் யாகம் செய்து கொள்ளலாம். எஸ்.வி.வேத பல்கலைக்கழகம் சார்பில் காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த யாகம் நடத்தப்படும்.

சப்தகோ பிரதட்சன மந்திரத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள யாக மண்டபத்தில் தினமும் 100 தம்பதிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டிசம்பர் 31ம் தேதி வரை டிக்கெட்டுகள் ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த யாக நிகழ்ச்சியில் சுமார்500 குடும்பங்கள் அமர்ந்து பங்கேற்கும் வகையில் நன்கொடையாளரின் உதவியுடன் விரைவில் நிரந்த யாக மேடை அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.வி.வேத பல்கலைக்கழக துணைவேந்தர் ஆச்சார்யா ராணி சதாசிவமூர்த்தி, அமைச்சர் ரோஜா, மேயர் டாக்டர் சிரிஷா, செயல் அதிகாரி ஏ.வி.தர்ம, அறங்காவலர் குழு வாரிய உறுப்பினர்கள் திப்பே சுவாமி, சுப்பராஜு, தேஷ் பாண்டே, யானாதையா, சதீஷ் குமார், ஏ.ஜே. சேகர், ஜெஇஓக்கள் சதா பார்கவி, வீரபிரம்மன் தம்பதியினர், மாநகராட்சி ஆணையர் ஹரிதா, திருப்பதி துணை கலெக்டர் பாலாஜி, சிவிஎஸ்ஓ நரசிம்ம கிஷோர், மாநகராட்சி துணை மேயர் பூமனா அபிநயா தம்பதியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி அலிபிரி சப்தகோ பிரதட்சனை மந்திரத்தில் சீனிவாசா திவ்ய அனுக்ரக யாகம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: