கட்டண தரிசனத்தில் 1,600 பேருக்கு அனுமதி ஆன்லைனில் நாளை டிக்கெட் விநியோகம் தீபத்திருவிழாவில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனம்

திருவண்ணாமலை, நவ.23: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்துக்கான கட்டண நுழைவு டிக்கெட் ஆன்லைன் மூலம் நாளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையர் கோயிலில், வரும் 26ம் தேதி நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனம் காண பக்தர்களுக்கு கட்டணமில்லா மற்றும் கட்டண அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 26ம் தேதி காலை 4 மணிக்கு பரணிதீபம் தரிசனம் காண ₹500 கட்டணத்தில் 500 நபர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகிறது. அதேபோல், அன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் தரிசனத்தின்போது கோயிலுக்குள் செல்ல ₹600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகளும், ₹500 கட்டணத்தில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் வழங்கப்பட உள்ளன. கட்டண அனுமதி சீட்டுகளை, https://annamalaiyar.hrce.tn.gov.in எனும் அண்ணாமலையார் திருக்கோயில் இணையதளத்தில், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதையொட்டி, நாளை (24ம் தேதி) காலை 10 மணி முதல் இந்த இணையதளம் செயல்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண தரிசன அனுமதி சீட்டு பெற விரும்பும் பக்தர்கள், ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக உள்ளீடு செய்ய வேண்டும். ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச் சீட்டு பதிவு செய்ததும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஓடிபி குறுஞ்செய்தி, பதிவு செய்தவரின் செல்போன் எண்ணுக்கு வரும். கட்டணச் சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் டிக்கட் பதிவிறக்கம் செய்து, பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் வரும் 26ம் தேதி அதிகாலை 2 மணிமுதல் 3 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் டிக்கட் பதிவிறக்கம் செய்து, மகாதீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள், வரும் 26ம் தேதி மாலை 2.30 முதல் 3.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பரணி தீபம், மகா தீப நிகழ்வுகளை காண வரும் பக்தர்கள், அசல் கட்டணச் சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு அண்ணாமலையார் கோயில் ராஜ கோபுரம் திட்டி வாசல்

The post கட்டண தரிசனத்தில் 1,600 பேருக்கு அனுமதி ஆன்லைனில் நாளை டிக்கெட் விநியோகம் தீபத்திருவிழாவில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: