நண்பனை வெட்டி கொல்ல முயற்சி பாஸ்ட்புட் கடை உரிமையாளர் கைது வந்தவாசி அருகே மனைவியிடம் பேசியதால் ஆத்திரம்

வந்தவாசி, நவ. 23: வந்தவாசி அருகே மனைவியிடம் ேபசியதால் ஆத்திரமடைந்த பாஸ்ட்புட் கடை உரிமையாளர், தனது நண்பனை சரமாரியாக வெட்டி கொல்ல முயன்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(40). இவர் அதே பகுதியில் பாஸ்புட் கடை நடத்தி வருகிறார். மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன்(38). இருவரும் நண்பர்கள். இந்நிலையில் கார்த்திக்கின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் சென்னை அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கடை நிர்வாகத்தை ரவீந்திரனிடம், கார்த்திக் ஒப்படைத்திருந்தாக தெரிகிறது. இந்த நிலையில் வியாபாரம் தொடர்பாக ரவீந்திரன் அடிக்கடி கார்த்திக் மனைவியிடம் பேசி வந்துள்ளார். இதையறிந்த கார்த்திக், ‘தனது மனைவிடம் பேசாதே’ என ரவீந்திரனை கண்டித்துள்ளார். ஆனால் ரவீந்திரன் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் நேற்று முன்தினம், விவசாய நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்த ரவீந்திரனை தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவீந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவீந்திரன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். பின்னர் அவரை வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வழியாக அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. பரணி தீபம் ஏற்றப்பட்டதும் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை பொது தரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதைத்தொடர்ந்து, மகா தீபம் ஏற்றப்பட்டதும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை பொது தரிசனத்தில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post நண்பனை வெட்டி கொல்ல முயற்சி பாஸ்ட்புட் கடை உரிமையாளர் கைது வந்தவாசி அருகே மனைவியிடம் பேசியதால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Related Stories: