சிவத்தையாபுரத்தில் ரூ.8 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டப்பணி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

ஏரல், நவ. 23: சிவத்தையாபுரத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் ஆர்ஓ சிஸ்டம் அமைத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திட்டப்பணியை சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தொடங்கி வைத்தார். சாயர்புரம் பேரூராட்சி 4வது வார்டு சிவத்தையாபுரம் அம்மன் கோயில் அருகில் பேரூராட்சி 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் ஆர்ஓ சிஸ்டம் அமைத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான பணிகள் தொடக்க விழா பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் பாபு, சிவத்தையாபுரம் இந்து நாடார் உறவின்முறை தர்மகர்த்தா பால்ராஜ், ஊர் தலைவர் அமிர்தராஜ், சாயர்புரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பிரவீணா, சுமதி, அமுதா, பிளாட்டினாமேரி, சிவத்தையாபுரம் தொழிலதிபர் சுதர்சன்ராஜா, பள்ளிக் கல்விக் குழு துணைத் தலைவர் முரளிதரன், ஊர் பிரமுகர்கள் மாதவன், ரத்தினகுமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் நித்தியகல்யாண் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சிவத்தையாபுரத்தில் ரூ.8 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டப்பணி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: