76 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூர் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு வேலூர் மாநகராட்சி

வேலூர், நவ.22: வேலூர் மாநகராட்சியில் 3 மண்டலங்களில் இருந்து 76 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூர் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வேலூர் மாநகராட்சியில் ஒவ்வொரு நாளும் 200 டன்களுக்கும் மேல் குப்பைகள் சேருகிறது. இதில் பல டன்கள் மக்கா கழிவுகளான பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக், தெர்மாகோல், கண்ணாடி கழிவுகள் மட்டுமே அடங்கும். இக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் பெரும் சிக்கல் நிலவி வந்த நிலையில், பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவுகளை தங்களுக்கான எரிபொருட்களாக பயன்படுத்திக் கொள்வதாக சிமென்ட் ஆலைகள் தெரிவித்தன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகளில் சேரும் பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வேலூர் மாநகராட்சியில் இருந்து மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் பல மெட்ரிக் டன் மக்கா கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை 3வது மண்டலத்தில் இருந்து 21 டன்களும், நேற்று முன்தினம் 4வது மண்டலத்தில் இருந்து 23 டன்களும் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று காலை 2வது மண்டலத்தில் இருந்து மொத்தம் 25 டன் மக்கா கழிவுகள் அரியலூர் டால்மியாபுரம் சிமென்ட் ஆலைக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநில சிமென்ட் ஆலைக்கு 2வது மண்டலத்தில் இருந்து 17.50 டன் மக்கா கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்த ஓரிரு நாட்களில் 1வது மண்டலத்தில் இருந்து பிரஸ்சிங் மூலம் கேக்குகள் வடிவில் உள்ள மக்கா கழிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 76 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூர் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு வேலூர் மாநகராட்சி appeared first on Dinakaran.

Related Stories: