சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் வெள்ளை சீருடையுடன் 3 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்: ஆவடி நாசர் எம்எல்ஏ அழைப்பு

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருநின்றவூரில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.சுரேஷ்குமார் வரவேற்றார். நகர செயலாளர் தி.வை.ரவி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர்.செந்தாமரை, ஜி.சி.சி.கருணாநிதி, வி.ஜெ.உமாமகேஸ்வரன், அக்னி மா.செ.ராஜேஷ், தெ.பிரியாகுமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ தலைமை வகித்து பேசினார்.

அவர் பேசியதாவது: டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியிலிருந்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையுடன் பெருந்திரளாக கலந்துகொண்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். நவம்பர் 27ம் தேதி இளைஞரணி செயலாளரும், இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பேரூரில் பட்டிதொட்டி எல்லாம் திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மற்றும் ரத்ததான, மருத்துவ முகாம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்குதல் மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வெகு சிறப்பாக நடத்த வேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் இரவும் பகலும் பாராமல் தேர்தலில் பணியாற்றி தலைமை கழகம் அறிவிக்கும் வேட்பாளரை பெருந்திரளான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநில ஆதிதிராவிட நல குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ப.அப்துக் மாலிக், பிரபுகஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், தொகுதி மேற்பார்வையாளர்கள் ஆர்.டி.இ.ஆதிசேசன், பழ.கணேசன், மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜி, வி.ஜி.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜி.விமல்வர்ஷன், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர், ஒன்றிய, நகர, செயலாளர்கள் டி.தேசிங்கு, ப.ச.கமலேஷ், ஜி.ஆர்.திருமலை, தங்கம் முரளி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் பெ.வினோத், வி.தியாகராஜன், ஆர்.பிரவீன் குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஜி.துர்கா பிரசாத், துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். முடிவில் வட்ட செயலாளர் கருணாநிதி, கவுன்சிலர் கமலக்கண்ணன் நன்றி கூறினர்.

The post சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் வெள்ளை சீருடையுடன் 3 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்: ஆவடி நாசர் எம்எல்ஏ அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: