இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, தியாகராயர் நகர், “ஓட்டல் அகார்டில்” நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடபட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாடு, வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து ஆலோசிக்கபடும் என கூறப்படுகிறது.
The post திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவ.26-ம் தேதி சென்னையில் நடைபெறும்: திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.