ஓரினச்சேர்க்கையாளருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி: கொலிஜியம் குழு பரிந்துரை

புதுடெல்லி: ஓரினச்சேர்க்கையாளரும் மூத்த வழக்கறிஞருமான சவுரப் கிருபாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு நவ.11ம் தேதி நடத்திய கூட்டத்தில் மூத்த வழக்கறிஞரும் ஓரினச்சேர்க்கையாளருமான சவுரப் கிருபாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது. இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் பல முறை நீதிபதி பதவிக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டும் அவரது பதவி உயர்வு 4 ஆண்டுகளுக்கு மேல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், மீண்டும் அவரது பெயரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. …

The post ஓரினச்சேர்க்கையாளருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி: கொலிஜியம் குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: