நியூயார்க்கில் கோலாகலமாக தொடங்கிய எம்மி விருது விழா: இந்திய நடிகர் வீர் தாஸ், இயக்குநர் எக்தா கபூருக்கு விருது

நியூயார்க்: பிரபல இசையமைப்பாளரும் காமெடி நடிகருமான வீர் தாஸ் நடப்பாண்டின் சிறந்த காமெடி நடிகருக்கான எம்மி விருதை பெற்று அசத்தியுள்ளார். 51வது சர்வதேச எம்மி விருது விழா நியூயார்க்கில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு வழங்கப்படும் இந்த விருதுக்காக 20 நாடுகளை சேர்ந்த 56 கலைஞர்களின் பெயர்கள் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றுள் சிறந்த இயக்குநருக்கான விருது பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான எக்தா கபூருக்கு வழங்கப்பட்டது. சிறந்த காமெடி நடிகருக்கான எம்மி விருதை வீர் தாஸ் லாண்டிங் என்ற வெப் தொடருக்காக வீர் தாஸுக்கு கிடைத்திருக்கிறது. நகைசுவை பிரிவில் இந்தியாவிற்கு அவர் முதல் எம்மி விருதை பெற்று தந்திருக்கிறார். ஏற்கனவே கடந்த 2021 ம் ஆண்டு நடந்த விருது வழங்கும் விழாவில் இதே பிரிவில் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

டெல்லி கிரைம் 2 தொடருக்கு சிறந்த நடிகைக்கான விருது செபாலிஷாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த விருதை மெக்சிகோ நடிகை கர்லா சமுசா தட்டி சென்றார். சிறந்த நடிகருக்கான விருதை தி ரெஸ்பாண்டெட் படத்தில் நடித்த மார்ட்டின் பிரிமேன் பெற்றிருக்கிறார். சிறந்த விளையாட்டுகான ஆவண பட விருது ஆர்லியன் கேப்டியா படத்திற்கு கிடைத்துள்ளது. ஜெர்மன் தயாரிப்பான தி எம்ப்ரஸ் சிறந்த ட்ராமா சீரிஸ் விருதை வென்றது. இந்நிலையில் இந்தியாவிற்கு 2 எம்மி விருதை பெற்று தந்த வீர் தாஸ் மற்றும் எக்தா கபூர் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை குறி வருகின்றனர்.

The post நியூயார்க்கில் கோலாகலமாக தொடங்கிய எம்மி விருது விழா: இந்திய நடிகர் வீர் தாஸ், இயக்குநர் எக்தா கபூருக்கு விருது appeared first on Dinakaran.

Related Stories: