மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்த நிலையில் 70 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.