மழைநீர் வடிகால் பணிகளை எம்எல்ஏ ஆய்வு

நாமக்கல், நவ.17: நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டிப்பட்டியில், மழைநீர் வடிகால் பணிகளை ராமலிங்கம் எம்எல்ஏ ஆய்வு செய்து பார்வையிட்டார். நாமக்கல் நகராட்சி 38வது வார்டு, கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் செல்லும் பகுதிகளை ராமலிங்கம் எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார். தற்போது, மழைகாலம் என்பதால் மழைநீர், கழிவுநீர் ஆகியவை விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாத வகையில் தடுக்க நகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை எம்எல்ஏ ராமலிங்கம் ஆய்வு செய்து, மழை காலத்தில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகாமல் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்யவேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சண்முகம், தெற்கு நகர திமுக செயலாளர் ராணா.ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மழைநீர் வடிகால் பணிகளை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: