ராஜஸ்தானில் உஜ்வாலா பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ.450 மானியம்: பாஜ தேர்தல் அறிக்கை வெளியீடு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வருகின்ற 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜ தலைவர் ஜேபி நட்டா நேற்று கட்சியின் தேர்தல் அறிக்கையான சங்கல்ப் பத்ராவை வெளியிட்டார். பாஜவின் தேர்தல் அறிக்கையில், ‘‘உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.450 மானியம், 5 ஆண்டுகளில் 2.5லட்சம் அரசு வேலை, பெண் குழந்தை பிறந்தால் ரூ.2லட்சம் சேமிப்பு பத்திரம் , மாவட்டந்தோறும் மகளிர் காவல்நிலையம் அமைக்கப்படும் மற்றும் நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் இழப்பீடு கொள்கை உருவாக்கப்படும் என்றும் பாஜவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் பிரதமரின் கிசான் சம்மன் நிதி ஆண்டுக்கு ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.12ஆயிரமாக உயர்த்தப்படும், கோதுமையை குவிண்டால் ரூ.2700க்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை, கிராமப்புற பெண்கள் 6 லட்சம் பேருக்கு திறன் பயிற்சியளிக்கப்படும், ஏழை குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு நர்சரி படிப்பு முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி, ஏழை மாணவர்கள், புத்தகம், சீருடை, பள்ளி பை உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.12ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்’’ என்றும் பாஜ வாக்குறுதி அளித்துள்ளது.

The post ராஜஸ்தானில் உஜ்வாலா பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ.450 மானியம்: பாஜ தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: