கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி; அனுமதி சீட்டு இல்லாமல் பக்தர்கள் மலைக்கு செல்ல தடை

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதி சீட்டு இல்லாமல் பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 4.45 மணி முதல் 6.12 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

இதையடுத்து வரும் 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி சீட்டு இல்லாமல் பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

மகா தீபத்தை தரிசிக்க சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, தீபத்திருவிழாவுக்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் தீபத்திருவிழா பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

The post கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி; அனுமதி சீட்டு இல்லாமல் பக்தர்கள் மலைக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Related Stories: