தேயிலை விலை வீழ்ச்சி பிரச்னைக்கு விரைவில் தீர்வு’

கோத்தகிரி: தேயிலை விலை வீழ்ச்சி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கோத்தகிரியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேர்க்கம்பை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், விக்சித் பாரத் சங்கல்பா யாத்ரா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன் வழங்கினார். இதனைத்தொடர்ந்து எல்.முருகன் அளித்த பேட்டி: பழங்குடியின ஏழை, எளிய விவசாயிகளின் நலனை உயர்த்த ஒன்றிய அரசு முழு மூச்சாக உள்ளது. அதிமுக-பாஜ இடையே ஏற்பட்டுள்ள பிளவை, கூட்டணியை தேசிய தலைவர்கள் தான் முடிவு சொல்வார்கள். தேசிய தலைமையின் அறிவுறுத்தலின்படி நாங்கள் செயல்படுவோம். தேயிலை விலை வீழ்ச்சி தொடர்பாக தேயிலை விவசாயிகள் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்துள்ளனர். தேயிலை விலை வீழ்ச்சி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேயிலை விலை வீழ்ச்சி பிரச்னைக்கு விரைவில் தீர்வு’ appeared first on Dinakaran.

Related Stories: