ரூ.77.87 லட்சம் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலை: முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தூத்துக்குடியில் ரூ.77.87 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்-க்கு நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கிணங்க, அன்னாரின் புகழுக்கு மென்மேலும் பெருமைச் சேர்க்கின்ற வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் பிறந்த நாளான இன்று தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள குவிமாடத்துடன் கூடிய அவரது திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாகதமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிடா, ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் கொள்ளு பேத்தி ரமோலா வாஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.77.87 லட்சம் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலை: முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: