அப்போது செல்போன் இருந்த ஹேண்ட் பேக்கை காணவில்லை. அந்த பையில் 15 பவுன் நகை, செல்போன், 100 கிராம் கொலுசு உள்பட ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தது. இது குறித்து அவர் பஸ் ஸ்டாண்டில் இருந்த புறக்காவல் நிலையத்தில் முறையிட்டார். இதையடுத்து போலீசார் சத்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். சென்னை சென்று கொண்டிருந்த பஸ்சின் கண்டக்டர், சீட்டில் இருந்து பையிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த செல்போனை எடுத்து பேசினார். அவரிடம் போலீசார், அந்த பை சத்யா என்ற பயணியுடையது. அவர் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையத்தில் இருப்பதாகவும், திரும்பி வரும்போது பையை ஒப்படைக்கும்படி வலியுறுத்தினர்.
அதன்படி நேற்று காலை அந்த பஸ் திருச்சி சென்றபோது, பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட்க்கு வந்தது. சத்யாவின் பையை புறக்காவல் நிலையத்தில் கண்டக்டர் வழங்கினார். அதில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அப்படியே இருந்தது. அங்கு காத்திருந்த சத்யாவிடம் அந்த பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது. பொருள் திரும்பி கிடைத்ததையடுத்து, சத்யா கண்ணீர் மல்க போலீசாருக்கும், பஸ் கண்டக்டர், டிரைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த விவரம் சமூக வலைதளங்களில் வைரலாகி போலீசாருக்கும், பஸ் கண்டக்டர், டிரைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
The post ரூ.7 லட்சம் பொருளுடன் பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட பை: ஒப்படைத்த கண்டக்டர், டிரைவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.
