இட ஒதுக்கீடு, சமூகநீதி பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசலாமா?: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சனம்

சென்னை: இட ஒதுக்கீடு, சமூகநீதி பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இட ஒதுக்கீட்டில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தானே இட ஒதுக்கீடு என்றுள்ளது? அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுத்தது எப்படி? ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில் 3 பேர் தானே ஒ.பி.சி.? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரது அரசு எத்தனை எஸ்சி, எஸ்டி உச்சநீதிமன்ற, ஐகோர்ட் நீதிபதிகளை இந்த 9 ஆண்டு ஆட்சியில் நியமித்துள்ளது? என்று சாடிய கி.வீரமணி, எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்? சமூக நீதி என்றால் இதுவா? பதில் கூறட்டும், இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

The post இட ஒதுக்கீடு, சமூகநீதி பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசலாமா?: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: