தீபாவளியை முன்னிட்டு ஆவினில் இதுவரை ரூ.67 கோடி விற்பனை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு ஆவினில் இதுவரை ரூ.67 கோடிக்கு விற்பனை நடந்துள்ள்தாகவும், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கான விற்பனை இலக்கு ரூ.149 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; “தீபாவளி பண்டிகைக்காக ஆவின் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு, 4,070 பணியாளர்களுக்கு 6 கோடி ரூபாய் போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது.

ஆவினில் தீபாவளி இனிப்பு விற்பனையை கடந்த ஆண்டை காட்டிலும் 20% கூடுதலாக இலக்கு நிர்ணயத்துள்ளோம். கடந்தாண்டு ரூ.115 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ரூ.149 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயத்துள்ளோம். தற்போது வரை ரூ. 67 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகியுள்ளது. பால் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது, இதனை சீர் செய்யவே விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கி பால் பண்ணைகளை தொடங்க கூறி வருகிறோம். பால் தேவை அதிகரித்து இருந்தாலும் சீரான அளவில் பால் கொள்முதல் நடைபெற்று வருவதால் தட்டுப்பாடு பற்றி பயப்பட வேண்டாம்.

ஆவின் நிர்வாகத்தில் 9.5% மின் இழப்பை குறைத்து 45 லட்ச ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளோம். பால்பாக்கெட் கவர் ரோல்களை 20 கிலோவிலிருந்து 40, 50 கிலோவாக அதிகரித்துள்ளோம், அதேபோல பால் பாக்கெட் செய்யும் இடத்தில் 1000 லிட்டருக்கு 20 லிட்டர் இழப்பை 0.5% அளவிற்கு குறைத்துள்ளோம். ஆவினில் எந்த ஒளிவும் மறைவும் இல்லை, வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகின்றோம்.

வாடிக்கையாளர்களுக்கு கிழிந்த பால்பாக்கெட்கள் வழங்குவதை தவிர்க்க டீலர்களுக்கு இழப்புத்தொகை வழங்குகிறோம். அதில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல ஆவின் தயாரிப்பு தயிர் பயன்பாடு காலத்தை கெட்டுப்போகும் காலத்தை வேதிப்பொருட்களின்றி நவீன தொழில்நுட்பத்தில் உயிரியல் முறைப்படியே 3-லிருந்து 7 நாட்களாக அதிகரித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

 

The post தீபாவளியை முன்னிட்டு ஆவினில் இதுவரை ரூ.67 கோடி விற்பனை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி! appeared first on Dinakaran.

Related Stories: