கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் போக்குவரத்து நெரிசல் சிக்கிக்கொள்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அருகே உள்ள சாலையோர கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் பைக், ஆட்டோ மற்றும் கார்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால் காலை, மாலை நேரங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து, இந்த பகுதியை கடந்து செல்ல 2 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.
இதுசம்பந்தமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் ஆகியோர் போக்குவரத்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள தள்ளுவண்டி கடைகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரம் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கவரும் பொதுமக்கள் வழியில்லாமல் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, இந்த சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும், இந்த பகுதிக்கு, போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்,’’ என்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டி கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.
