அதில் கஞ்சா இருந்தது. விசாரணையில், பிடிபட்டவர் மதுரையை சேர்ந்த ஹரி விக்னேஷ் (28) என்பதும், இவர் மதுரை மாவட்டத்தில் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை மாத தவனையில் எடுத்து பணம் கட்ட தவறும் நபர்களை பணம் கேட்டு அடியாட்கள் மூலம் மிரட்டி வந்ததும், இவர் மீது மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது, அடிதடி வழக்குள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது வீட்டில் இருந்து கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில், சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர், இவரிடம் பணம் கொடுத்து ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வர சொன்னதாகவும், அதன்படி கஞ்சாவை கடத்தி வந்து, மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாகவும், தெரிவித்துள்ளார். இவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, செல்போனை பறிமுதல் செய்த போலீசார், நேற்று அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த ரவுடி சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.
