இன்னொரு அமைச்சர் ரூ. 20 கோடிக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு, தரமில்லாத தீவனத்தை மக்களுக்கு வழங்கி ஊழல் செய்கிறார். மற்றொருவர் சூப்பர் முதல்வர் சபாநாயகர். இவர் தனியாக ஒரு ஆட்சி நடத்துகிறார். யார், யாரை எல்லாம் நாம் உருவாக்கினோமோ அவர்கள் நம்மை முதுகில் குத்திவிட்டு சென்றவர்கள்தான், அதில் ரங்கசாமி முதலானவர், நமச்சிவாயம் இரண்டாவது, மூன்றாவது அங்காளன். முதல்வர் ரங்கசாமி கோரிமேடு எல்லையை தாண்டாதவர். மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி கேட்க மாட்டார். வீடு தேடி வந்து ஒன்றிய அரசு தரவேண்டும். ஒரு பக்கம் ரெஸ்டோ பார், மறுபக்கம் கஞ்சா என எல்லோரும் மயக்கத்திலே இருக்க வேண்டும். அப்போதுதான் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும். ரங்கசாமி ஆட்சி குறைபிரசவம், சீக்கிரம் முடிந்துவிடும் என்றார்.
The post ரூ.5 கோடி லஞ்ச பணத்தில் திருமண மண்டபம் கட்டுகிறார்: புதுவை முதல்வர் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
