திருவேங்கடம் கலைவாணி பள்ளி சிலம்பம் போட்டியில் சாதனை

திருவேங்கடம்,நவ.4: தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம்  கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். ஆண்கள் மிக மூத்தோர் பிரிவில் பிரவீன் ஒற்றைக்கம்பு வீச்சில் முதலிடமும், அசோக் பாண்டியன் கம்பு சண்டையில் இரண்டாம் இடமும் சந்தோஷ், கிஷோர் சூர்யா கம்பு சண்டையில் மூன்றாம் இடமும் இளையோர் பிரிவில் அஜய் கம்பு சண்டையில் மூன்றாம் இடமும் பெற்றனர்.

பெண்கள் இளையோர் பிரிவில் ரக்சனா கம்பு சண்டையில் இரண்டாம் இடமும், சுபயாழினி, தாருண்யா கம்பு சண்டையில் மூன்றாம் இடமும், மூத்தோர் பிரிவில் நவீனா ஒற்றை கம்பு வீச்சில் இரண்டாம் இடமும், ஜெயலட்சுமி கம்பு சண்டையில் மூன்றாம் இடமும், அபிநயா இரட்டை கம்பு வீச்சில் மூன்றாம் இடமும், மிக மூத்தோர் பிரிவில் அனு கம்பு சண்டையில் இரண்டாம் இடமும், மலர்தர்ஷினி, பிரியதர்ஷினி கம்பு சண்டையில் மூன்றாம் இடமும், தனு இரட்டைக்கம்பு வீச்சில் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வரும் நிர்வாகியுமான பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர், ஆசிரிய. ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

The post திருவேங்கடம் கலைவாணி பள்ளி சிலம்பம் போட்டியில் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: