கிராம கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்வு: இறுதி சடங்கிற்கு ரூ.5 ஆயிரம்; தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் ஆக ஓய்வூதியம் உயர்த்தி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் 2021-22ம் ஆண்டின் மானியக்கோரிக்கையின்போது, துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு தமிழ்நாடு திருக்கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும், கிராமப்புற பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால் இறுதி சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். உறுப்பினர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக ரூ.19.12 கோடியினை மானியமாக ஒதுக்கீடு செய்யுமாறு ஆணையர் அரசை கேட்டுக்கொண்டார்.இதை கவனமுடன் அரசு பரிசீலனை செய்து, அதனை ஏற்று கோயில் பூசாரிகளின் எண்ணிக்கை 4 ஆயிரம் பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இல்லாத கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்து ஓய்வு பெற்ற கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் ஆக உயர்த்தியும், கிராம கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால் இறுதி சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகை ரூ.2 ஆயிரத்தை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தியும், உறுப்பினர் மரணமடைந்தாால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்திற்கு 2022-2023ம் நிதியாண்டு செலவினமாக ரூ.15.62 கோடி (3256 பேர்*ரூ.4,000*12) நிதி ஒதுக்கீடு செய்ய நிர்வாக அனுமதி வழங்கியும், றத்போது நடப்பு நிதியாண்டில் 5 மாதங்களுக்கு மட்டும் தேவைப்படும் கூடுதல் தொகை ரூ.1.62 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது. கிராம கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால் இறுதி சடங்கிற்கு வழங்கப்படவுள்ள தொகை மற்றும் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள நிதியுதவி, அரசால் கிராம கோயில் பூசாரிகள் நல வாரியத்திற்கு ஆண்டுதோறும் வழங்ப்படும் தொகையில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கிராம கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்வு: இறுதி சடங்கிற்கு ரூ.5 ஆயிரம்; தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: