ஒன்றிய பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒன்றிய பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றிய முதல்வர்; சுய மரியாதை- சீர்திருத்த திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித்தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். எமர்ஜென்சியின் போது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர். சீர்திருத்த திருமணங்கள் திமுக ஆட்சியில் தான் அங்கீகரிக்கப்பட்டன.

தனக்கு எதிராக இதுவரை கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகளை ஒடுக்க IT, ED, CBI உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்திய பாஜக அரசு இப்போது செல்போன் ஒட்டு கேட்பதை கையில் எடுத்துள்ளது. என்ன செய்தாலும் பா.ஜ.க. தோல்வியை தவிர்க்க முடியாது, I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும். மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் இன்றைக்கு சூழல் அமைந்திருக்கிறது. தனக்கு எதிராக கருத்து கூறுபவர்களை ஒன்றிய பாஜக அரசு மிரட்டுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன.

செய்வதையும் செய்துவிட்டு அமைச்சர் விசாரணை நடத்தப்படும் என்று கூறும் நிலையில்தான் நாடு உள்ளது. ஒட்டுக்கேட்பு புகார் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். 5 மாநில தேர்தல்களிலும் பாஜக தோல்வியை தழுவும் என்ற செய்தியே வருகிறது. இந்தியாவை காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு நீங்கள் வெற்றியை தர வேண்டும் இவ்வாறு கூறினார்.

The post ஒன்றிய பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: