இதில் கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். இதில் முதலிடம் பிடித்த மெஸ்ஸி, நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றார். இதன் மூலம் 8-வது முறையாக அவர் இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ல் Ballon d’Or விருதை வென்றுள்ளார். மகளிர் பிரிவில் Ballon d’Or விருதை ஸ்பெயின் நாட்டிற்காக விளையாடி வரும் அடனா பொன்மதி வென்றார். ஆடவர் பிரிவில் சிறந்த கிளப் அணிக்கான விருதை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றது. ஹாலண்ட், Gerd Muller டிராபியை வென்றார். மார்ட்டினஸ், Yachine டிராபியை வென்றார்.
The post கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி 8-வது முறையாக Ballon d’Or விருதை வென்று சாதனை!! appeared first on Dinakaran.