சனிதோறும் படியுங்கள் திடக்கழிவு மேலாண்மை முகாம் குப்பைகளை தரம் பிரிக்க டிரம் வழங்கல்

கரூர்: கரூர் வஉசி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை முகாம் நடைபெற்றது. கரூர் ரோட்டரி விங்ஸ் மூலம் திடக்கழிவு மேலாண்மை முகாம் கரூர் வஉசி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி உதவி கவர்னர் நிருபமா, மண்டல ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜ், தலைவர் சந்திரசேகரன், செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி உபயோகத்திற்கு என தரம் பிரிக்கும் வகையில் முன்று ட்ரம்களும் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஜான்சன் ஜெபராஜ் வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் பத்மினி, ராஜேஸ்வரி, சந்தியா ஆகியோர் செய்திருந்தனர்.

The post சனிதோறும் படியுங்கள் திடக்கழிவு மேலாண்மை முகாம் குப்பைகளை தரம் பிரிக்க டிரம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: