இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: பல்கலைக்கழக பணி நியமனங்கள் குறித்து டாக்டர் குழந்தைசாமி தலைமையிலான குழு ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு 11.7.2009ல் பிறப்பித்த அரசாணையில் அரசிடம் முன் அனுமதி பெற்றே பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது 16.7.2009க்கு பிறகு நடைபெறும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு முன்பு நடந்த பணி நியமனங்களுக்கு பொருந்தாது. பல்கலைக்கழகங்களில் 7 மற்றும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கும் தவறை அனைத்து பல்கலைக்கழங்களும் செய்கின்றன. இதன் மூலம் பல்கலைக்கழக நிர்வாகம் தவறாக வழி நடத்தப்படுகின்றன. தவறான நிர்வாகத்துக்கு எந்த பல்கலைக்கழகமும் விதிவிலக்கு அல்ல. பல்கலைக்கழங்களில் சிண்டிகேட் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விசாரிக்க தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலர் தனிக்குழு அமைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
The post தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் தீர்மானங்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
