சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளார். பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றுள்ளார். பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், கைதாகி கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.