சென்னை மயிலையில் பழம்பெரும் ஓவியர் மணியம் நூற்றாண்டு விழா

சென்னை: தமிழ் வார, மாத இதழ்களில் உலகளாவிய தரத்தில் சிறந்து விளங்கிய ஓவியர்களில் முக்கியமானவர் மணியம். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது ஓவிய வாழ்க்கை மற்றும் நீண்ட நெடிய கலைப்பயணத்தின் சாதனை பக்கங்களுடன் ‘மணியம்-100: சரித்திரம் படைத்த சித்திரங்கள்’ எனும் புத்தக வெளியீட்டு விழா, இன்று காலை சென்னை மயிலாப்பூர், பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி அரங்கில் நடைபெற்றது.

இந்நூலை மூத்த நடிகர் சிவகுமார் வெளியிட, கல்கியின் பேத்தி சீதா ரவி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஓவியர்கள் மாயா, ஜெயராஜ், ராமு, அமுதபாரதி ஆகிய 4 பேருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், கவிஞர் மற்றும் மூத்த எழுத்தாளர் சுப்ரபாலன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓவியர் மணியத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூத்த எழுத்தாளர் சிவசங்கரி, நடிகர் சிவகுமார், கார்ட்டூனிஸ்ட் மதன், கல்கியின் பேத்தி சீதா ரவி உள்பட 6 பேர் சிறப்புரையாற்றினர்.

The post சென்னை மயிலையில் பழம்பெரும் ஓவியர் மணியம் நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: