ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதல்; முதல் பெண் தலைவர் கொல்லபட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் காசா நகரத்தில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவில் முதல் பெண் தலைவரான ஜமிலா அல்சாந்தி கொல்லபட்டதாக இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஜமிலா அல்சாந்தி காசாவின் சட்ட சபையில் பணியாற்றிய 2 பெண் தலைவர்களில் ஒருவர் ஆவார். நீண்ட நாட்களாகவே இவர் மீது இஸ்ரேல் ராணுவம் குறிவைத்ததாக கூறப்படுகிறது. இவர் ஹமாஸ் அமைப்பின் செயல்பாடுகளை கட்டுபடுத்தும் ஒரு முக்கிய தலைவராக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர், பொது விவகாரா செயலாளர் ஆகியோரை கொன்று குவித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால், தலைவர்கள் இறந்தது குறித்து ஹமாஸ் அமைப்பினர் அதிகாரப்பூர்வமகா எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் பெண் தலைவர் கொல்லபட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ஹமாஸின் ஆயுத கிடங்குகள், தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள், சுரங்க பாதைகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தபடும் என்றும், வடக்கு காசா பகுதிகளில் தற்போதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

The post ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதல்; முதல் பெண் தலைவர் கொல்லபட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: