இந்த நிலையில், ஆந்திராவில் அதிகளவில் BC பிரிவு மக்கள் உள்ளதால் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்கள் தொகை ஆய்வு நடத்தப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்தார். ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மட்டும் 139 சாதிகள் உள்ளதாகவும் பல்வேறு துறைகளில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அறிந்து கொள்ள மக்கள் தொகை ஆய்வு உதவும் என்றும் அவர் கூறினார். பிராந்தியம், தொழில் மற்றும் சமூக பொருளாதார நிலை உள்ளிட்ட அளவுகோள்களின் அடிப்படையில் நவம்பர் 15ம் தேதி வாக்கில் இந்த மக்கள் தொகை ஆய்வு தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு நவ.15ல் தொடக்கம் : அமைச்சர் வேணுகோபால கிருஷ்ணா தகவல்!! appeared first on Dinakaran.
