கைவினைப்பொருட்கள் கண்காட்சி திறப்பு விழா

திருச்செங்கோடு, அக்.19: நாடு முழுவதும் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தால் காதி மகாஉத்சவ் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோட்டில் சேலம் நெசவாளர் சேவை மையம் சார்பில் மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. திருச்செங்கோடு நெல்குத்தி மண்டபத்தில் நடக்கும் இக்கண்காட்சியினை நாமக்கல் எம்பி சின்ராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கொமதேக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் முன்னிலை வகித்தார். இக்கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட கைத்தறி சங்கங்கள் தங்களது கைத்தறி ரகங்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளனர். அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் தீபாவளி பண்டிகை கால தள்ளுபடியாக 30 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சியினை ஏற்பாடுசெய்துள்ள சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன், மக்கள் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ரகங்களை வாங்கி கைத்தறி நெசவாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும்படி கேட்டுக் கொண்டார்.

The post கைவினைப்பொருட்கள் கண்காட்சி திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: