தென்கொரியாவில் தொடங்கிய பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி; மெய்சிலிர்க்க வைத்த பாராசூட் வீரர்களின் அற்புத சாகசங்கள்..!!

தென்கொரியா: தென்கொரியாவில் நடைபெற்ற பாதுகாப்பு தளவாடங்களின் கண்காட்சியில் அந்நாட்டு ராணுவ விமானங்கள் அரங்கேற்றிய சாகசங்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க செய்தது. தென்கொரியாவின் சியோங்னம் படைத்தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாதுகாப்பு தளவாடங்களின் கண்காட்சி தொடங்கிவுள்ளது. தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தொடங்கிவைத்த இந்த கண்காட்சியில், ராணுவ டேங்கர்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள், ராடர்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் உள்ளிட்ட தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடக்க விழாவில் தென்கொரிய பாராசூட் படை பிரிவினருடன் பன்னாட்டு வீரர்கள் விமானத்தில் இருந்து குதித்து நடத்திய சாகசங்கள், கரவொலிகளை அள்ளின. இதையடுத்து நடைபெற்ற தென்கொரியாவின் பல்வகை ராணுவ விமானங்களின் அணிவகுப்பு கண்களை கவர்வதாக இருந்தது. சிறிய வகை போர் விமானங்களின் சாகசங்களை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர். ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், அமெரிக்கா, கனடா, பிரேசில் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

கொரிய தீப கர்ப்பத்தில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் தென்கொரியா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தங்களது ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு தளவாடங்களின் கண்காட்சியை தென்கொரியா நடத்தி வருகிறது.

The post தென்கொரியாவில் தொடங்கிய பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி; மெய்சிலிர்க்க வைத்த பாராசூட் வீரர்களின் அற்புத சாகசங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: