சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 204 வருடம் கடுங்காவல் சிறை: அதிவிரைவு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (32). பத்தனம்திட்டா அருகே உள்ள அடூரில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 8 மற்றும் மூன்றரை வயதான அக்கா, தங்கையை மிட்டாய் தருவதாக வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளார். இருப்பினும் தன்னையும், தங்கையையும் வினோத் மிரட்டி பலாத்காரம் செய்ததை சிறுமி தாயிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து அடூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். இந்த வழக்கு அடூர் அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தங்கையை பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வழக்கில் வினோத்துக்கு 100 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் 8 வயது அக்காவை பலாத்காரம் செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் வினோத்துக்கு 104 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.42 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த 2 வழக்குகளிலும் சேர்த்து இவருக்கு 204 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் இதையடுத்து முதல் வழக்கில் அதிகபட்சமாக 20 வருடங்களும், 2 வது வழக்கில் 20 வருடங்களும் தண்டனை கிடைக்கும். மொத்தமாக சேர்த்து இவர் 40 வருடங்கள் சிறையில் இருந்து கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

The post சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 204 வருடம் கடுங்காவல் சிறை: அதிவிரைவு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: