சென்னை : சென்னையில் ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கார் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்துகின்றனர். கோவை, மதுரை, திருச்சியிலும் இன்று போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.