கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி

வாழப்பாடி: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நரசிங்கபுரத்தில் நகர அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். போட்டியை மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பையை வழங்கினார். நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் செல்வமணி, பேராசிரியர் தங்க பாண்டியன், ஏற்காடு ரமேஷ்பாபு, செல்வகுமார், விஜயகுமார், நரசிங்கபுரம் நகர்மன்ற தலைவர் அலெக்சாண்டர், பிரகாஷ், ராமதாஸ், சூர்யா, மணிகண்டன், சந்துரு, அருண், பிரபாகரன், சோலை, பிரவீன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முதல் பரிசு பைபர்ஸ் அணியினரும், 2ம் பரிசு தில்லை நகர் அணியினரும், 3ம் பரிசு ஸ்ரீராம் பிரதர்ஸ் அணியினரும் வென்றனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: