வேலியே பயிரை மேய்ந்தது; குடோனில் செல்போன் திருடிய ஊழியர்கள் 3 பேர் பிடிபட்டனர்

புழல்: குடோனில் செல்போன் திருடிய ஊழியர்கள் மூவரை கைது செய்தனர். சென்னை புழல் பகுதியில் உள்ள தனியார் குடோனில் விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட பொருட்கள் வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த குடோனில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மேலாளர் மகேந்திரன், குடோனில் உள்ள பொருட்களை இருப்பு சரி பார்த்தபோது ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 10 செல்போன்கள் கணக்கில் வராமல் இருந்தது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தொழிலாளர்களிடம் கேட்டபோது யாரும் உரிய பதில் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து புழல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குபதிவு செய்து குடோனில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது குடோனில் பணியாற்றிவந்த சோழவரம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு (22), சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த அருண் (25), இதயத்துல்லா (24) ஆகியோர்தான் செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை கைது செய்து ஐபோன் செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வேலியே பயிரை மேய்ந்தது; குடோனில் செல்போன் திருடிய ஊழியர்கள் 3 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: