கருவன்னூர் வங்கி மோசடி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் ரூ.57 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

திருவனந்தபுரம்; கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னூரில் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்தநிலையில் வங்கியில் ரூ.300 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. முன்னாள் அமைச்சரும், மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான மொய்தீனின் உறவினர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவின. அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இதற்கிடையே நேற்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் உள்ள 117 சொத்துக்களை முடக்குவதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட இதன் மதிப்பு மட்டும் ரூ.57 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 92 வங்கி கணக்குகள், 11 வாகனங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

The post கருவன்னூர் வங்கி மோசடி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் ரூ.57 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: