உலகப் பார்வை தினத்தில் புதிய மைல்கல்: கண் பராமரிப்பு மூலம் 60,000 பேரின் வாழ்வை மாற்றி சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் சாதனை

சென்னை: சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் – (எஸ்எஸ்டி) உலகப் பார்வை தினத்தில் மைல்கல் சாதனையை எட்டுகிறது. கண் பராமரிப்பு மூலம் 60,000 பேரின் வாழ்வை மாற்றி அமைத்துள்ளது. பெங்களூரு, அக்டோபர் 12, 2023: உலக பார்வை தினத்தை முன்னிட்டு, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும் சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் ஆகியவற்றின் சமூக சேவைப் பிரிவான சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் – எஸ்எஸ்டி [Srinivasan Services Trust (SST), தங்களுடன் இணைந்து விரிவான கண் பராமரிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகளை கௌரவிப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் எஸ்எஸ்டி, கண் மருத்துவமனைகளுடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முழுவதும் பல்வேறு கண் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் 60,000-க்கும் மேற்பட்ட நபர்கள் பயன் அடைந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளுடன் எஸ்எஸ்டி-யின் கூட்டு முயற்சிகளின் விளைவாக 2,000-க்கும் மேற்பட்ட இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கண் பராமரிப்பு அம்சத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்எஸ்டி-யின் பணிகள், வெறும் எண்ணிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சமூக நல்வாழ்விற்கான உண்மையான அர்ப்பணிப்பை உள்ளடக்கியதாக உள்ளன. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள பல மருத்துவமனைகளுடன் இணைந்து, எஸ்எஸ்டி உள்ளூர் சுகாதார அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் வசதிகள் குறைந்த, தொலைதூர கிராமங்களில் கண் சிகிச்சைகள் எளிதில் கிடைத்துள்ளதுடன், சமூக சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது. இது குறித்து சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை தலைவர் திரு ஸ்வரண் சிங் ஐஏஎஸ் (ஓய்வு) (Swaran Singh IAS – (R), Chairman, Srinivasan Services Trust) தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு பேசுகையில், “உலக பார்வை தினம் என்பது கண் பார்வைப் பராமரிப்புக்கான நமது பகிரப்பட்ட பொறுப்பை நினைவூட்டுகிறது. புள்ளிவிவரங்களுக்கு அப்பால், இது வாழ்க்கை மற்றும் சமூகங்கள் வலுவடைவது தொடர்பான முன்னேற்ற நடவடிக்கையாகும். மருத்துவமனைகளுடனான நாங்கள் ஒத்துழைத்து செயல்படுவது, சமூகத்தில் சுகாதார விழிப்புணர்வை உருவாக்குவதற்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

நாங்கள் சேவை செய்யும் சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்ளும், மருத்துவமனைகளின் அசைக்க முடியாத ஆதரவுக்கு நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். வரும் ஆண்டுகளில் நாங்கள் பணிபுரியும் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கண் சிகிச்சை அளித்து கண்புரை இல்லாத கிராமங்களை உருவாக்க விரும்புகிறோம். சமூகத்தின் நல்வாழ்வுக்காக எங்கள் கூட்டு செயல்பாட்டு நிறுவனங்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து எதிர்நோக்கியுள்ளோம். உலக பார்வை தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், எஸ்எஸ்டி, கோவை சங்கரா கண் அறக்கட்டளையுடன் இணைந்து ‘விஷன் சென்டர்’ எனப்படும் பார்வை மையத்தை அமைக்கிறது.” என்றார்.

The post உலகப் பார்வை தினத்தில் புதிய மைல்கல்: கண் பராமரிப்பு மூலம் 60,000 பேரின் வாழ்வை மாற்றி சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: