மாணவர்களுக்கு மரக்கன்றுகள்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்

புழல்: அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் கிராமத்தில் உள்ள அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் ஆத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 246 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சற்குணம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதில் அப்துல் கலாம் அறக்கட்டளை தலைவர் தினேஷ், பள்ளி ஆசிரியர்கள் பவானி, மல்லிகா ஊராட்சி செயலர் மோகனசுந்தரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு மரக்கன்றுகள்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: