மருத்துவ அணி சார்பில் திமுக அரசின் சாதனை விளக்க கருத்தரங்கம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

மதுராந்தகம்: திமுக மருத்துவ அணி சார்பில், திராவிட மாடல் அரசின் ஆங்கில கருத்தரங்கம் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக மருத்துவ அணி சார்பில், திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்து ஆங்கில கருத்தரங்கம் மதுராந்தகத்தில் நேற்று முன்தினம் நடந்தது இந்நிகழ்ச்சிக்கு மருத்துவ அணி துணை செயலாளர் அரசு தலைமை தாங்கினார். மருத்துவ அணி துணை செயலாளர் அண்ணாமலை வரவேற்றார். மருத்துவ அணி இணை செயலாளர் லட்சுமணன் எம்எல்ஏ, துணை செயலாளர்கள் வல்லபன், அருண், கலை கதிரவன், மன்சூர் அலி கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் எம்பி செல்வம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மருத்துவ அணி மாநில செயலாளர் எழிலன் எம்எல்ஏ, சமூகநீதி என்ற தலைப்பிலும், மருத்துவ அணி மாநில தலைவர் கனிமொழி சோமு எம்பி, மருத்துவ சேவை வளர்ச்சி குறித்தும், மூத்த மருத்துவர் ரவிசங்கர் திராவிட வாழ்வியல் குறித்தும், திராவிட மாடலின் சாதனைகளை முன்வைத்து மருத்துவ மாணவர்கள் மத்தியில் பேசினர்.

மேலும், மருத்துவ மாணவர்கள் மத்தியில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. பதில் கூறிய மாணவ- மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதில் திமுக ஒன்றிய செயலாளர் சரவணன், சிவக்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காஞ்சி தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் திவாகர் வாசுதேவன் இறுதியாக நன்றி தெரிவித்தார்.

The post மருத்துவ அணி சார்பில் திமுக அரசின் சாதனை விளக்க கருத்தரங்கம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: