கொட்டங்காடு பகுதியில் சாலையை ஆக்கிரமிக்கும் உடைமரங்கள் அகற்றப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

உடன்குடி : உடன்குடி அருகே கொட்டங்காடு பகுதியில் சாலையை ஆக்கிரமித்துள்ள உடை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வருகிற 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. தசரா திருவிழாவில் சுமார் 25லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர். தசரா திருவிழாவில் முக்கிய நிகழ்வான 24ம் தேதி மகிஷாசுரசம்ஹாரம் நடக்கிறது.

இதில் கலந்து கொள்ள நாகர்கோவில், திசையன்விளை பகுதியிலிருந்து கொட்டங்காடு வழியாக குலசேகரன்பட்டினத்திற்கு பக்தர்கள் வாகனங்களில் வருவர். வரும் வழியில் இருபுறங்களிலும் சாலையோரத்தில் முட்செடிகள் வளர்ந்து பக்தர்கள் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொட்டங்காடு- குலசேகரப்பட்டினம் சாலை பகுதியில் இருபுறங்களிலும் பக்தர்கள் வாகனத்திற்கு இடையூறாக உள்ள முட்செடிகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொட்டங்காடு பகுதியில் சாலையை ஆக்கிரமிக்கும் உடைமரங்கள் அகற்றப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: