கணக்கம்பாளையம் ஊராட்சியில் தார் சாலை, குடிநீர் தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை

 

உடுமலை, அக்.8: உடுமலை ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வெஞ்சமடை ஆர்விஜி நகர் பகுதியில் ஊராட்சி 15வது நிதி குழு மானியத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் தார் சாலையும், கணேசபுரம் பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாதன், பணிகளை தொடங்கி வைத்தார்.

உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு. ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் ஒன்றிய குழு உறுப்பினர் துணை தலைவர் பாஸ்கரன் ஒன்றிய கவுன்சிலர் சங்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து, சௌந்தர்ராஜ், பேச்சியம்மாள், பாலசுப்பிரமணியம், ஒன்றிய துணை செயலாளர் சுவாமிநாதன், பிரதிநிதி ராமகிருஷ்ணன், மணியரசு,

வார்டு உறுப்பினர் கற்பகம், தமிழ்ச்செல்வன், சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் குமார், மொடக்குபட்டி பாபு, தொழிலாளர் அணி நாகராஜ் தென்றல் சேகர், கிளை கழக செயலாளர்கள் கருப்பையா, அசோக்குமார், சின்னச்சாமி, முபாரக், திருமலை, நாகராஜ், சுரேஷ், பழனிச்சாமி, ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மூர்த்தி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

The post கணக்கம்பாளையம் ஊராட்சியில் தார் சாலை, குடிநீர் தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: