புரட்டாசி 3வது சனிக்கிழமை பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பாடாலூர், அக்.8: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். புரட்டாசி பெருமாள் சுவாமிக்கு உகந்த மாதமாகும். தமிழக மட்டுமின்றி பெருமாள் வீற்றிருக்கும் அனைத்து கோயில்களும் புரட்டாசி சனி அன்று பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நீண்ட நேரம் பெருமாளை தரிசிப்பர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம்.

அதன்படி, புரட்டாசி 3வது சனிக்கிழமை முன்னிட்டு பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோயில் மற்றும் அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், சந்தனம் குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடாலூர் திருவளக்குறிச்சி, பெருமாள் பாளையம், சீதேவிமங்கலம், ஆலத்தூர் கேட், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், காரை, செட்டிகுளம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

The post புரட்டாசி 3வது சனிக்கிழமை பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: